நீரில் மூழ்கிய உழவு இயந்திரம் – காணாமல் போன மாணவர்களின் சடலம் மீட்ப்பு.! Video

0
198

அம்பாறை- காரைத்தீவு பகுதியில் நேற்று (26) உழவு இயந்திரம் வெள்ளத்தில் மூழ்கி காணாமல் போன மாணவர்களில் இருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (26) மாலை நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் சென்ற உழவு இயந்திரம், காரைத்தீவு பஸ் நிலையம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

உழவு இயந்திரத்தில் 11 மாணவர்கள், சாரதி மற்றும் உதவியாளர் பயணம் செய்தனர்,

இதன்போது, வௌ்ளத்தில் சிக்கிய 5 மாணவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டனர்.

அதன்படி, காணாமல் போன மாணவர்களில் இருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சாய்ந்தமருது,மாளிகைகாடு ஜனாசா அமைப்புகள் 2 படகுகலை கொண்டு தேடுதல் நடவடிக்கைளில் ஈடுபட்டு கொண்டு இருகின்றன மற்றும் காரைதீவு சகோதர்களின் 1 படகில் மொத்தமாக 3 படகுகள் தொடர்சியாக 18 மணித்தியாலங்கள்ளாக தேடுதல் நடவடிக்கைளில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.