முல்லைத்தீவை சேர்ந்த இளைஞன் மலேசியாவில் உயிரிழப்பு.. நடந்தது என்ன..?

0
146

முல்லைத்தீவு – உடுப்புக்குளத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த 31.10.2024 அன்று மலோசியாவில் மேம்பால வீதி ஒன்றில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்…

மலேசியாவில் வேலைக்காக சென்ற குறித்த இளைஞன் அங்கு பொலீசாரின் சுற்றிவளைப்பில் சிக்கியவேளை அதில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக மேம்பால வீதி ஒன்றில் இருந்து குதித்து கீழ் நின்ற காரின் மேல் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இவரது உடலத்தினை நாட்டிற்கு கொண்டுவருவதற்கு பெற்றோர்கள் உறவினர்களினால் முயற்சி எடுக்கப்பட்டு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு தற்போது உடுப்புக்குளத்தில் உள்ள அனது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இராசரத்தினம் கஜேந்திரன் (கஜன்) என்று அழைக்கப்படும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது உடலம் 11.11.2024 அன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

குறித்த இளைஞனின் உயிரிழப்பானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.