லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்.!

0
218

லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் லண்டனில் நீண்ட காலமாக வசித்து வந்த நிலையில், அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார்.

கணேசராசா தியாகராசா (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 17ஆம் திகதி பேருந்தில் தனது உறவினர் வீட்டுக்கு பயணித்துக்கொண்டிருந்த வேளை கல்வியங்காட்டு பகுதியில் பேருந்தினுள் மயங்கி சரிந்துள்ளார்.

உடனடியாக அவரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.