கொழும்பு – இரத்தினபுரி வீதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு.!

0
139

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – இரத்தினபுரி வீதியின் நாவெடிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரத்தினபுரியில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, எதிரே வந்த டிப்பர் ரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டியில் பின்னால் பயணித்த நபர் அவிசாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் 34 வயதுடைய வெவெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மரணித்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அவிசாவளை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.