புத்தளத்தில் நடந்த விபத்தில் இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்.!

0
168
Common Photo

புத்தளம் – கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவில பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (25) இரவு இடம்பெற்றுள்ளது.

தலவில நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றை கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்ற போது எதிர்த்திசையில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, மோட்டார் சைக்கிள்களின் செலுத்துனர்கள் இருவரும் குழந்தை ஒன்றும் காயமடைந்துள்ள நிலையில் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒரு செலுத்துனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் – தலவில பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.