நைஜீரியாவில் நடந்த பதற வைக்கும் சம்பவம் – இதோ வீடியோ.!

0
159

பெரும் அதிர்ச்சியாக நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் வெடித்து 147 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியானார்கள். நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிற வீடியோ வெளியாகி மனதைக் கணக்க செய்கிறது. நைஜீரியாவின் ஜிகாவா மாநிலத்தில் உள்ள விரைவுச் சாலையில் எரிபொருள் ஏற்றப்பட்ட லாரி சென்று கொண்டிருந்தது.

அப்போது டேங்கர் லாரி திடீரென சாலையில் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் கவிழ்ந்தது. அப்போது லாரியில் இருந்த எரிபொருள் சாலையில் ஆறு போல் ஓடியது. இதையடுத்து அவ்வழியே சென்ற பலரும் பெட்ரோலை சேகரிக்க திரண்டனர்.

இந்நிலையில் பெட்ரோல் சேகரிக்க முயன்ற டேங்கர் திடீரென வெடித்து சிதறியதில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பெரும் அபாயங்கள் இருந்தபோதிலும், விபத்து நடந்த இடங்களில் இருந்து எரிபொருளை சேகரிக்க மக்கள் ஆபத்தான முறையில் குவிந்ததால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து மற்றும் அதைத் தொடர்ந்து வெடித்த சூழ்நிலைகள் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.