இன்று முதல் விவசாயிகளுக்கு 15000 ரூபாய் உரமானியம்; வெளியான மகிழ்ச்சி தகவல்.!

0
163

அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை வழங்கும் பணிகள் இன்று (14) முதல் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, முதற்கட்டமாக 15,000 ரூபாயும், இரண்டாம் கட்டமாக 10,000 ரூபாயும் வழங்கப்படவுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் இருந்து உர மானியம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனவும் அதன் பின்னர் பொலன்னறுவை, அனுராதபுரம், மகாவலி வலயம் உள்ளிட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.