லான்மாஸ்ரரில் வயல் உழுதவருக்கு நேர்ந்த சோகம்.!

0
162

மஹவ, விஹேனேகம பிரதேசத்தில் வயல் வெளியில் லான்மாஸ்ரர் ரக உழவு இயந்திரத்தின் ரோட்டரைப் பயன்படுத்தி மண் உழும் போது கை தவறி உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உழவு இயந்திரத்தை இயக்கிக்கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாகொல்லாகம திம்பிரியகெதர பகுதியைச் சேர்ந்த ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

லான்மாஸ்ரர் ரக உழவு இயந்திரத்தை இயக்கியவர் அதிலிருந்து தூக்கி எறியப்பட்டு, ரோட்டரியில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.