கணவனை போட்டுத்தள்ளிய மனைவி.. இலங்கையில் நடந்த பதற வைக்கும் சம்பவம்.!

0
149

கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி இரும்பு கம்பியால் தாக்கி கணவனை கொன்றுள்ளார்.

நேற்று (08) காலை தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடகம்மெத்த பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

உடகம்மெத்த, கோமகொட பிரதேசத்தில் வசித்து வந்த 62 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கொலைக்கு பயன்படுத்திய இரும்பு கம்பி மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன் சந்தேகநபரான மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.