இணையத்தில் ஆசிரியையின் படம் – இரு மாணவர்கள் கைது.. மலையகத்தில் சம்பவம்.!

0
255

இளம் பெண் ஆசிரியை ஒருவரின் முகத்துக்கு நிர்வாண புகைப்படத்தை இணைத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் மாத்தளை விஜய வித்தியாலயத்தைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொல்கொல்ல மகாவலி கல்வி பீடத்தில் இருந்து மாத்தளை விஜய வித்தியாலயத்திற்கு ஒரு வருட பயிற்சிக்காக சென்ற இளம் பெண் ஆசிரியையின் முகத்துக்கு நிர்வாண புகைப்படத்தை இணைத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

குறித்த இளம் ஆசிரியை அந்த பாடசாலைக்கு நடன ஆசிரியையாக பயிற்சியளிக்க நியமிக்கப்பட்டதுடன் அவரின் நிர்வாண புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவியதையடுத்து, மாத்தளை பொலிஸில் முறைப்பாடு செய்ததோடு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த பாடசாலையின் 10ஆம் வருட மாணவர்கள் இருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.