மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி – 5 இளம் யுவதிகள் கைது.!

0
137
Common photo

கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றிலிருந்து 5 பெண்கள் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிசை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு, மாத்தளை, மாவனல்லை மற்றும் தெனியாய ஆகிய பகுதிகளில் வசிக்கும் 21 முதல் 32 வயதுக்குட்பட்ட ஐந்து பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.