யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு.!

0
248

யாழ்ப்பாணம் – மானிப்பாய் – கட்டுடை சந்தியில் வேனும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சங்கானையை சேர்ந்த முகுந்தன் அஜந்தா என்ற 43 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு பெண் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டதாகவும் இருவர் தப்பியோடியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்திய சாரதி தப்பியோடியதாகவும் வேறொருவரை பொலிஸார் கைது செய்ததாகவும் அங்கு கூடிய பொதுமக்கள் குற்றஞ்சாட்டினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த பெண்ணின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.