யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்கள் கைது.!

0
273

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடியில் ஈடுபட்ட பதின்மூன்று இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலை (11) கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகையும் அதிலிருந்த பதின்மூன்று இந்திய மீனவர்களையுமே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கைதான மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று, யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு பின்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.