யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண் உயிரிழப்பு.!

0
116

2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை குளவிக்கொட்டுக்கு இலக்காகிய பெண்ணொருவர் புதன்கிழமை (03) தெல்லிப்பளை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது செட்டிக்குறிச்சி பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த குணசேகரம் வரதசுரோன்மணி (வயது-67) என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

குறித்த பெண் நேற்றையதினம் அவரது வீட்டுக்கு அருகேயுள்ள காணிக்குள் சென்று பனையோலை எடுத்தவேளை அதனுள் இருந்த கருங்குளவி அவர்மீது கொட்டியது.

இந்நிலையில் அவர் சங்கானை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.