இலங்கையில் – லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழப்பு.!

0
218

எட்டியாந்தோட்டை – பெலெல்லேகம பிரதேசத்தில் லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (03) அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்தில் லயன் குடியிருப்பொன்றில் தங்கியிருந்த 60 வயதுடைய ஆணும் 50 வயதுடைய பெண்ணும் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் 03 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.