மகனின் தாக்குதலில் தந்தை உயிரிழப்பு.. இலங்கையில் சம்பவம்.!

0
272

அநுராதபுரம் பிரதேசத்தில் இப்பலோகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிரிபிட்டியாகம பகுதியில் மகனால் தாக்கப்பட்டு தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (30) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

இப்பலோகம – ஹிரிபிட்டியாகம பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய தந்தையொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவரது தலையில் பலத்த காயம் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்டவரது 34 வயதுடைய மகன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தினமும் தனது தந்தையை தாக்கி காயப்படுத்துவதாகவும் சம்பவத்தின் போது இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இப்பலோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.