முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பெண் ஊழியர் மீது தாக்குதல்.!

0
110

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பெண் ஊழியர் வருவர் மீது கடந்த 30.05.2024 அன்று மற்றும் ஒரு பெண் ஊழியரால் தாக்குதல் நடத்தப்பட்டு தாக்குதலுக்கு இலக்கான பெண் ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட பெண் ஊழியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முள்ளியளை பொலீசில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தாக்குதலை மேற்கொண்ட பெண் தலைமறைவாகியுள்ள நிலையில் 23.06.2024 இன்று முள்ளியவளை பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவரும் முள்ளியவளை பொலீசார் குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.