சிறுவனை கொடூரமாக தாக்கியவன் கைது..!

0
298

சமூக ஊடகங்களில் வைரலான சிறுவன் ஒன்று கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (05) காலை புல்மோட்டை அரிசி மலை பகுதியில் குறித்த நபரும் மேலும் தாக்குதல் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் இரு பெண்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

45 வயதுடைய ஆண் ஒருவரும் 37 மற்றும் 46 வயதுடைய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெலிஓயா கல்யாணபுர பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான 4 1/2 வயதுடைய சிறுவனையும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.