யாழில் சோகம்.. கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் மரணம்.!

0
242

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் வீட்டுக் கிணற்றில்தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சிறுவனின் பெற்றோர் பணி நிமித்தம் வெளியே சென்றவேளை, சிறுவன் கிணற்றில் தண்ணீர் எடுக்க முயன்றுள்ளார்.

அப்போது “கப்பி” பொருத்தப்பட்டிருந்த கயிறு அறுந்ததால், சிறுவன் கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளில் சாவகச்சேரி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.