மன்னாரில் முச்சக்கரவண்டி மோதி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு.!

0
2

மன்னார் தள்ளாடி – தாராபுரம் வீதியின், துர்க்கி சிட்டி கிராமத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒன்றரை வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (18) பிற்பகல் பேக்கரி உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றுடன் குறித்த சிறுமி மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த சிறுமி உடனடியாக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மன்னார் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த 01 வருடம் 06 மாதங்கள் வயதுடைய சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.