இச் சம்பவம் இன்று மதியம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் இடம் பெற்று உள்ளது.
இச் சம்பவம் இன்று மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட ராணி தோட்ட பிரிவில் இடம் பெற்று உள்ளது.
சிறுமி காணாமல் போய் உள்ளது தெரியவந்த போது அப் பகுதியில் உள்ள மவுசாக்கலை நீர் தேக்க பகுதியில் சிறுமியின் பாதணிகள் கிடப்பதை கண்டு சந்தேகம் கொண்ட அப் பகுதியில் உள்ள மக்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தற்போது சிறுமியின் உடலை மீட்டுள்ளனர் சம்பவம் நடந்த இடத்திற்கு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் எஸ் புஷ்பகுமார சென்று நேரில் பார்வையிட்டு அதன் பின்னர் ஹட்டன் பொலிஸ் பிரிவில் இருந்து தடையவியல் பொலிசார் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் உடட் கூற்று பரிசோதனை செய்த பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க படும் என்று கூறினார்.
இது குறித்து மஸ்கெலியா பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்










