போலி உறுதிப்பத்திரம் தயாரித்த சட்டத்தரணிக்கு சிறை.!

0
2

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

பொரளைப் பிரதேசத்தில் உள்ள காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரம் தயாரித்தமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட சட்டத்தரணியான 61 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய்க்கே இந்த தீர்ப்பு வழங்கப்படுள்ளது.

எவ்வாறாயினும், இந்தப் பன்னிரண்டு வருட சிறைத்தண்டனையை ஏககாலத்தில் 6 வருடங்களில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.