யாழில் கடன் சுமையால் இளைஞன் எடுத்த முடிவு.!

0
213

யாழ்ப்பாணத்தில், கடன்சுமை காரணமாக இளைஞர் ஒருவர் இன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.

இளவாலை – அக்கத்தானை இளவாலை பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.

அவர் நேற்றையதினம் வீட்டிலிருந்து வேலைக்கென புறப்பட்டு சென்ற நிலையில், சண்டிலிப்பாய் – அந்திரான் வாய்க்காலில் உள்ள துருசில் சுருக்கு மாட்டிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது உறவினர்களிடம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, அவர் கடன்சுமை காரணமாக ஏற்பட்ட மன விரக்தியில் இவ்வாறு செய்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

இது குறித்து விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டனர்.