ஒட்டுசுட்டானில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு.. காணி உரிமையாளர் கைது.!

0
70

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் அலகரை, பகுதியில் யானைகளில் இருந்து பாதுகாப்பு பெற சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட யானை வேலியில் மின்சாரம் தாக்கி மோகனராசா லோயிதன் (வயது-4) எனும் சிறுவன் மரணமடைந்ததை தொடர்ந்து குறித்த காணி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் அலகரை, பகுதியில் யானைகளில் இருந்து பாதுகாப்பு பெற அமைக்கப்பட்ட யானை வேலியில் இலங்கை மின்சார சபையின் மின்னிணைப்பு ஊடாக கிடைக்கும் மின்சாரம் நேரடியாக வழங்கப்பட்டதாலேயே சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த சட்டவிரோத யாணை வேலி அமைத்த காணி உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.