வெகனார் வாகனத்தில் மாடு கடத்தல் முறியடிப்பு.. மூன்று இளைஞர்கள் கைது..!

0
51

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வெகனார் வாகனத்தில் மாட்டினை கடத்தி சென்ற இளைஞர்கள் மூவர் நேற்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அண்மைய நாட்களாக மாடுகள் களவாடப்பட்டு வரும் நிலையில் நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அடசூரிய அவர்களின் ஆலோசனை மற்றும் கட்டளைக்கு அமைய புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதி ஆடைதொழிற்சாலைக்கு முன்பாக நின்ற மாட்டினை இறைச்சிக்காக களவாடிய இளைஞர்கள் மூவர் நேற்றையதினம் மாலை 4 மணியளவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் மூவரும் 10.02.2026 வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இளைஞர்கள் தொடர்ச்சியாக மாடு கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் கனகராயன்குளம், முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு பகுதிகளை சேர்ந்த 19,21,29 வயதுடைய இளைஞர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.