புதுக்குடியிருப்பு பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 5 இளைஞர்கள் கைது.!

0
171

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பகுதியிலேயே போதை பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் புதுக்குடியிருப்பு பொலிசார் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மக்களால் தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் முல்லைத்தீவு விசேஷ போதை பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று (02) புதுக்குடியிருப்பு திப்பிலி பகுதியிலிருந்து ஐஸ் போதைப்பொருளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

நேற்றைய தினம் (02) புதுக்குடியிருப்பு திப்பிலி பகுதியில் 14 கிராம் ஐஸ் உடன் ஐந்து பேரும் வெகனார் வாகனம் ஒன்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைது செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குறித்த கைது நடவடிக்கை கோம்பாவில் பகுதியில் நேற்று (02.02.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மன்னார், வலைஞர்மடம், திம்பிலி மற்றும் கைவேலி ஆகிய பகுதிகளை சேர்ந்த 20 முதல் 28 வயதுக்குட்பட்ட ஐந்து இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெகனார் வாகனத்தில் போதைப்பொருளை விற்பனை செய்து கொண்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 15 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தை பெறுமதி 2 இலட்சத்து 25 ஆயிரம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிசார் இவர்களை இன்று (03) முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய போது அங்கு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய அதிகாரி தி.ஜனன் கு‌றி‌த்த நபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது எனவும் இவர்களை பொலிஸ் காவ‌லி‌ல் வைத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் கு‌றி‌த்த மூவரையும் 06.02.2026 வரை. அவர்களை தடுத்து வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.