மட்டக்களப்பு: களுவன்கேணி கடற்பரப்பில் தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த 21 வயதுடைய இளம் மீனவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவ விபரம்:
மட்டக்களப்பு, களுவன்கேணி பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே குறித்த தோணி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தைத் தொடர்ந்து கடலில் மூழ்கி காணாமல் போன மீனவரைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
அடையாளம் காணப்பட்டவர்:
சடலமாக மீட்கப்பட்டவர் களுவன்கேணி, வோட்வாடி வீதியைச் சேர்ந்த வடிவேல் வினோதன் (21 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.












