கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் – கரடிப்புலவு கிராமத்தில் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (27) மீட்கப்பட்ட இந்த சடலத்தில், தலை பகுதியின் பின்புறத்தில் காயம் காணப்படுவதால் அவர் இனந்தெரியாதவர்களால் தாக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் துவிச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்த போதே, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
சடலம் இன்று (28) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அதில், தலையில் ஏற்பட்ட கடும் தாக்கத்தின் காரணமாக ஏற்பட்ட அதிக இரத்தப் போக்கினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் பழம்பாசி கரடிப்புலவினை சேர்ந்த 41 அகவையுடைய நாகையா நாகராஜா என தெரியவந்துள்ளது.
குடும்பத்தினை பிரிந்து தனிமையில் வசித்து வந்த நபர்மீது திட்டமிட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றகோணத்தில் இது ஒரு கொலை முயற்சி என்ற வகையில் ஒட்டுசுட்டான் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.











