900 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐஸுடன் ஒருவர் கைது.!

0
48

நிட்டம்புவ பகுதியில் சுமார் 900 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரிடமிருந்து 61 கிலோ 838 கிராம் எடையுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன் போது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வண்டி ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.