போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு அரசியல் பாதுகாப்பு கிடையாது.! ஜனாதிபதி

0
1

தமது அரசாங்கத்தின் கீழ் ஒருபோதும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு அரசியல் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்திட்டத்தின் வடக்கு மாகாண நிகழ்ச்சி திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

அரச திணைக்களங்களில் உள்ள சில பலவீனமான அதிகாரிகள், இந்த கடத்தல்காரர்களுடன் கைகோர்த்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஆகையால், அச்செயற்பாடுகளில் இருந்து விலகுமாறு தான் மீண்டும் ஒருமுறை கோருவதாகவும், அவ்வாறு இல்லையெனில் கடமைகளில் இருந்து விலகுமாறு அறிவிப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கோரினார்.