மற்றொரு கோர விபத்து: ஒருவர் பலி.!

0
12

அநுராதபுரம் – ஓயாமடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிக்கவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (12) பிற்பகல் 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஓயாமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டி ஒன்றும் கார் ஒன்றும் மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் முச்சக்கரவண்டி வண்டியின் சாரதியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து ஓயாமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.