புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தல், நவத்தன்குளம் பகுதியில் இன்று (12) திங்கட்கிழமை காலை இடம்பெற்ற #கோர விபத்தில் மூவர் #உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரும் வேனும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
புத்தளம் நோக்கிப் பயணித்த கார் ஒன்றும், எதிர்த் திசையில் வந்த வேனும் ஒன்றும் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணித்த இரண்டு பெண்களும், ஒரு ஆண் ஒருவரும் சம்பவ இடத்திலேயே #உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் #காயமடைந்த 7 பேர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
#அதிவேகம் அல்லது கவனக்குறைவு விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதுடன், சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.










