உழவு இயந்திரத்திலிருந்து கீழே விழுந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

0
141

அநுராதபுரம் – மகாவிலச்சிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உலுக்குளம் கிராம வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) இரவு பதிவாகியுள்ளது.

உலுக்குளம் பகுதியிலிருந்து பேமடுவ நோக்கிப் பயணித்த உழவு இயந்திரம் ஒன்றில் பயணித்த நபர், உழவு இயந்திரத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானார்.

விபத்தில் காயமடைந்த நபர் பேமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பெமதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடையவர்.

உயிரிழந்தவரின் சடலம் பேமடுவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மகாவிலச்சிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.