சற்றுமுன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு.!

0
78

அம்பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் மீது இன்று (22) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி, இரண்டு குற்றக் கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் விளைவாகவே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபரும் குற்றக் கும்பல் உறுப்பினர்களுடன் தொடர்புகளைப் பேணியவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பாகவும், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காகவும் அம்பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.