அஸ்வெசும பயனாளிகளுக்கான விசேட அறிவிப்பு.!

0
1

அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் திட்டத்தின் முதற் கட்டத்தின் கீழ் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகளுக்கான கால அவகாசம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன.

இதற்கமைய, தற்போது இத்திட்டத்தின் கீழ் நன்மைகளை பெறுபவர்கள் மற்றும் விண்ணப்பித்து இன்னும் நன்மைகளை பெறாதவர்கள் என அனைத்து தரப்பினரதும் தகவல்கள் புதுப்பிக்கப்படுகின்றன.

தகவல்களை இதுவரை புதுப்பிக்காத அனைவரும் பின்வரும் முறைகளில் அதனைச் செய்துகொள்ள முடியும்:

https://eservices.wbb.gov.lk/ என்ற இணையதளத்திற்குச் சென்று ஒன்லைன் (Online) மூலம் தகவல்களைப் புதுப்பிக்கலாம்.

அந்தந்த கிராம உத்தியோகத்தர் பிரிவின் கிராம உத்தியோகத்தர் அல்லது அஸ்வெசும திட்டத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தரைச் சந்தித்து, தொழில்நுட்ப உதவியுடன் ஒன்லைனில் தகவல்களைப் புதுப்பிக்கலாம்.

உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தாம் வசிக்கும் பிரதேச செயலகத்தின் நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவில் ஒப்படைப்பதன் மூலம் தகவல்களைப் புதுப்பிக்கலாம்.

அருகில் உள்ள தகவல் தொடர்பு மையங்களுக்கு சென்று, அங்குள்ள தொழில்நுட்ப உதவியுடன் ஒன்லைனில் தகவல்களைப் புதுப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.