தாயார் படிக்குமாறு கூறியதால் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்.வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடையமாணவியே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்..
தாயார் அந்த மாணவியை பாடங்களை படிக்குமாறு தினமும் கூறுவதால் மாணவி மன வி*ர*க்*தியில் இருந்துள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த 12ஆம் திகதியும் இவ்வாறு படிக்கும்படி தாயார் கூறியதால் குப்பைகளை எரிப்பது போல் பாசாங்கு செய்து பெ*ற்*றோ*லை தன்மீது ஊற்றி தனக்கு தானே தீ பற்ற வைத்துள்ளார்.
இதன்போது அயல்வீட்டில் உள்ளவர்கள் மாணவியை காப்பாற்றியவேளை குறித்த மாணவி அவர்களுக்கு சம்பவத்தை தெரிவித்துள்ளார்.
பின்னர் தீக்காயங்களுக்குள்ளான அவரை மந்துவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
🛑இது ஒரு விபத்து அல்ல – இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கை.. “படிக்கச் சொல்வது தவறு” என்பதைக் காட்டவில்லை.
ஆனால்,
👉 குழந்தைகளின் மனநிலை கேட்கப்படாமல் போவது
👉 அழுத்தம் + பயம் + தனிமை
👉 “படிக்கவில்லை என்றால் தோல்வி” என்ற உணர்வு, இவையே ஒரு குழந்தையை மௌனமாக உடைக்கின்றன என்பதை இந்த மரணம் நினைவூட்டுகிறது.
🛑பெற்றோர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்…
• படிப்பு முக்கியம் – ஆனால் மனநலம் அதைவிட முக்கியம்
• கேள்விகள் மட்டும் வேண்டாம் – கேட்கும் மனம் வேண்டும்
• ஒப்பீடு வேண்டாம் – புரிதல் வேண்டும்
• பயம் வேண்டாம் – பாதுகாப்பான உரையாடல் வேண்டும்
🤍 உதவி கிடைக்கும் – தயவுசெய்து தனியாக விடாதீர்கள் மனஅழுத்தம், உயிர்மாய்ப்பு எண்ணங்கள் இருப்பவர்கள் உடனடி உதவியை நாடுங்கள்.
இலங்கை மனநல உதவி:
📞 1926 – National Mental Health Helpline – ஒரு அழைப்பு ஒரு உயிரைக் காப்பாற்றலாம்.
🕯️ உயிரிழந்த அந்த குழந்தைக்கு ஆழ்ந்த அஞ்சலி.
🙏 இந்த செய்தியை பகிரும் போது உணர்ச்சியைத் தூண்ட அல்ல, ஒரு குழந்தையை காப்பாற்றும் எச்சரிக்கையாக பகிருங்கள்.
“படிப்பை வலியுறுத்துங்கள் – ஆனால் குழந்தையின் மனதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.”










