இலங்கையில் தடுப்பூசி விஷமானதால் உயிரிழந்த இளம் பெண்.. நீதி கோரும் உறவினர்கள்.!

0
6

களுத்துறை – மத்துகம வைத்தியசாலையில் தடுப்பூசி விஷமானதால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 23 வயதுடைய சந்தமினி திவ்யாஞ்சலி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்த பெண்ணுக்கு அவரது பெற்றோரும் உறவினர்களும் நீதி கோரியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்..

கடந்த 12 ஆம் திகதி காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளவதற்காக IDH வைத்தியசாலைக்கு சந்தமினி சென்றிருந்தார்.

அவரைப் பரிசோதித்த வெளிநோயாளர் பிரிவில் இருந்த வைத்தியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஆனால் படுக்கைகள் இல்லாததால் அறைக்குள் அனுமதிக்கவில்லை. நோயாளி வெளியேறத் தயாராகும் போது அவர் மயக்கமடைந்துள்ளார்.

பின்னர் நோயாளி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகன்றது.

🛑எழும் பாரிய சந்தேகங்கள்:

அவருக்கு வழங்கப்பட்டது ‘Ondansetron’ எனும் ஊசி மருந்து எனத் தெரியவந்துள்ளது. அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை (NMRA) இந்த மருந்தை பயன்பாட்டிலிருந்து நீக்குவதற்கு ஏற்கனவே தீர்மானித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

தரமற்ற மருந்துகள் மீண்டும் ஒருமுறை ஒரு பெறுமதியான உயிரைப் பறித்துவிட்டதா? எனும் அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

🛑எமது கோரிக்கை:

சந்தமிணியின் மரணத்திற்கு முறையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். ⚖️ தரமற்ற மருந்துகளால் அப்பாவி உயிர்கள் பலியாவதை தடுத்து நிறுத்த வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும். அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் பெற்றோர் மற்றும் சகோதரனுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்! 🕊️🙏

(பிரதி)