‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது.!

0
1

தெமட்டகொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், கொழும்பு நகர மதுவரிப் பிரிவு அதிகாரிகளால் தெமட்டகொடை பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் சீருடையில் இருந்தவாறே, 200 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.