அரச மற்றும் அரச அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று (16) மீண்டும் திறக்கப்படுகின்றன.
மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வட மத்திய மற்றும் தென் ஆகிய 6 மாகாணங்களில் உள்ள சகல பாடசாலைகளும் இன்றைய தினம் மீண்டும் திறக்கப்படுகின்றன.
எவ்வாறாயினும் அனர்த்தங்களால் அதிக பாதிப்புக்குள்ளான ஊவா, மத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களில் உள்ள 640 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.










