ஹெரோயினுடன் நாட்டிற்கு வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மலேசியாவிலிருந்து நாட்டிற்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அவரிடம் இருந்து 2 கிலோகிராம் 300 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










