சகோதரனை தடியால் அடித்துக்கொன்ற மற்றைய சகோதரன்.!

0
113

பமுனுகம – சேதவத்த பகுதியில் நேற்று மாலை தடியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் கம்புருகமுவ, துடெல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவருக்கும் அவரது சகோதரருக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு காரணமாக சகோதரர் தடியால் தாக்கியதில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் பமுனுகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 36 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்