கற்பிட்டி முசல்பிட்டி பகுதியில் ஒரு வயதும் நான்கு மாதமும் நிரம்பிய குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்..
குறித்த குழந்தை வீட்டிற்கு பின்புறத்தில் விளையாடுவதாக பெற்றோருக்கு சொல்லிவிட்டு சென்றுள்ளது.
எனினும், நீண்டநேரத்திற்கு பிறகு குழந்தையை காணவில்லை என பெற்றோர்கள் தேடி அலைந்து உள்ளனர். இதன் போது, வீட்டிற்கு வெளியில் உள்ள குளியலறையில், சிறிய பக்கெட் ஒன்றுக்குள் குழந்தை உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
20 லீட்டர் தண்ணி கேனை, மேல் பக்கம் வெட்டி பயன்படுத்தப்பட்ட நிலையிலேயே அதற்குள் குழந்தை உயிரிழந்து கிடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் உறவினர்களும், ஊர் மக்களும் தமது வேதனைகளையும், அதிருப்திகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










