யாழ்ப்பாணம், அனலைத்தீவு பகுதியில் நீர் நிறைந்த கிணற்றில் தவறி வீழ்ந்து 56 வயதுடைய பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (12) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் உறவினர்களால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனலைத்தீவு, 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சுப்பையா நளினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் நீர் நிலைகள் மற்றும் கிணறுகள் நிரம்பிக் காணப்படுகின்றன.
இவ்வாறானதொரு சூழலில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.











