இலஞ்சம் பெற்ற மதுவரி திணைக்கள அதிகாரி ஒருவர் கைது.!

0
148

20 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற மதுவரித் திணைக்கள சார்ஜண்ட் ஒருவரை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

உள்ளூர் மருந்து உற்பத்தி நிலையமொன்றைப் சுற்றிவளைத்து சட்டவிரோத இயந்திரங்கள் மூலம் கஞ்சா அரைக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி, அது சந்தேகநபர் 20 இலட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக கோரியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மதுவரித் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் சார்ஜண்ட் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

கைதான சந்தேக நபரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.