கிளிநொச்சியில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஊழியர் உயிரிழப்பு.!

0
105

எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த கண்டாவளை பிரதேச செயலக ஊழியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்றைதினம் உயிரிழந்துள்ளார்

கிளிநொச்சி – கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய 03 பிள்ளைகளின் தந்தையான பரமானந்தன் கிருபாகரன் என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

இவர் கண்டாவளை பிரதேச செயலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றிவந்துள்ளார்.

கடந்த 5ஆம் திகதி குறித்த நபருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றபோது, இவரின் குருதி மாதிரி பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே அவருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது இனங்காணப்பட்டது.

இதையடுத்து அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.