நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட பேரழிவுக்குப் பின்னர், பாதிப்புகள் மிகுந்த பதுளை மாவட்டத்துக்கு மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த பலர் நிவாரணப் பணிகளிலும் சுத்திகரிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடச் சென்றனர்.
அவர்களுடன் சேர்ந்து “We Care Worldwide” அமைப்பைச் சேர்ந்த வெளிநாட்டு தன்னார்வலர்களும் நிலைமைக்கேற்ற உதவிகளை வழங்குவதில் தீவிரமாக பங்கேற்றனர்.
பதுளை ஓயாவத்த பகுதியில் வீதி சுத்தம் மற்றும் இடிபாடுகள் அகற்றும் பணிகளில் வெளிநாட்டு தன்னார்வக் குழு சிறப்பாக ஈடுபட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வர உள்ளூர் முயற்சிகளுடன் இணைந்து செயல்பட்டது.










