சேற்றில் சிக்கிய உலங்குவானூர்தி; தள்ளிச் செல்லும் இளைஞர்கள்.. வைரலாகும் வீடியோ.!

0
63

நுவரெலியா வலப்பனை நில்தண்டாஹின்னா பகுதியில் ஹெலிகொப்டரின் இரு சக்கரங்கள் சேற்றில் சிக்கியுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற அனர்த்தத்தால் வெள்ளத்தில், மண்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்கு விமானப்படை, இராணுவப்படை ஹெலிகொப்டரை பயன்படுத்தி வருகின்றது.

நாட்டின் நாலாபக்கங்களிலும் சுழன்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டதுடன் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கும் ஹெலிகொப்டர் செயற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் நுவரெலியாவின் நில்தண்டாஹின்னா பகுதியில் நிவாரணப் பொருட்களை இறக்கிக் கொண்டிருந்த வேளை பலத்த மழை பெய்துள்ளது.

இதனால ஹெலிகொப்டரின் இரண்டு பின் சக்கரங்களும் சேற்றில் சிக்கிக் கொண்டது. சேற்றில் சிக்கிய ஹெலிகொப்டரை அங்கிருந்து மீட்பதற்கு அதிகாரிகளும் அப்பகுதி இளைஞர்களும் முயற்சித்துள்ளனர். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.