அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் – ஜனாதிபதி.!

0
95

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.

இதன்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு, எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய மூன்று மாதங்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

அதன்படி..

🚨 சீரற்ற வானிலையினால் மொத்தமாக 1.7 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 5,165 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் மற்றும் 55,747 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

🚨 பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு, எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய மூன்று மாதங்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும்.

🚨 இரண்டுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 50,000 ரூபாவும் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரம் உள்ள குடும்பத்திற்கு 25,000 ரூபாவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

🚨 வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள், சேதமடைந்த தமது வீட்டு உபகரணங்களை மீண்டும் கொள்வனவு செய்வதற்காக ரூபா 50,000 வழங்கப்படும்.

🚨 முற்றாக சேதமடைந்துள்ள – மீள்குடியேற முடியாத நிலையில் உள்ள வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு 50 லட்சம் ரூபா. (வெள்ளம், மண்சரிவு இரண்டுக்கும் பொருந்தும்)

🛑அபாய வலயங்களுக்கு மீண்டும் செல்வதற்கு இடமளிக்கமாட்டோம். அரச காணி வழங்கப்படும். அரச காணி இல்லாவிட்டால் காணி வாங்குவதற்கு 50 லட்சம் ரூபாவரை கொடுப்பனவு வழங்கப்படும்.

🛑பகுதியளவு சேதமடைந்துள்ள வீடுகளை புனரமைப்பதற்கு அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாவரை வழங்கப்படும். (நான்கு கட்டங்களாக இதற்குரிய மதிப்பீடு இடம்பெறும்.)

🛑அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு 10 லட்சம் ரூபா இழப்பீடு

🚨 தற்போது முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தொடர்ந்தும் அங்கேயே தங்கியிருக்க விரும்பினால், அவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்படும் எனவும், மாறாக, முகாம்களிலிருந்து வெளியேறி வாடகை வீடுகளில் வசிக்க விரும்புவோருக்கு, 6 மாத காலத்திற்கு மாதாந்தம் 25,000 ரூபாய் வாடகைக் கொடுப்பனவாக வழங்கப்படும்.

🚨 அனர்த்தத்தினால் நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பிற்கு 150,000 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும்.

🚨பேரிடரால் அழிந்த பதிவு செய்யப்பட்ட மாடுப் பண்ணைகளை மீண்டும் தொடங்க ரூபா 200,000 மானியம்.

🚨முழுமையாக சேதமடைந்த ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட மீன்பிடி படகுக்கும் ரூபா 400,000 இழப்பீடு.

சேதமடைந்த வணிக கட்டடங்களை மீண்டும் திறக்க

💼 ஒவ்வொரு வணிக கட்டடத்துக்கும் — ரூ. 50 இலட்சம் (Rs. 5 MILLION)

➡️ தொழில் மற்றும் வருமானத்தை மீட்டெடுக்க உதவும் முக்கிய உதவி வழங்கப்படும்

🚨காய்கறி பயிர்செய்கையை மீண்டும் தொடங்க ஒரு ஹெக்டேருக்கு ரூபா. 200,000.

🚨பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு திறைசேரியிலிருந்து ரூபா 15,000 மற்றும் ஜனாதிபதி நிதியிலிருந்து Rs. 10,000. ரூபா வழங்கப்படும்.

🚨நிவாரணப் பணிகளுக்காக ஏற்கனவே 10,500 மில்லியன் ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நிவாரணப் பணிகளுக்காக 50 பில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்புப் பிரேரணை இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.