நேற்றைய தினம் கண்டி கடுகன்னாவ மண்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு.! வீடியோ

0
41

நேற்றைய தினம், கடுகண்ணாவவில் ஏற்பட்ட பாறை சரிவில் உயிரழந்த 6 பேரில் பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், பேராதனை பொறியியல் பீட விரிவுரையாளர் லஹிரு என்பவரும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடுகண்ணாவவில் இருந்த ரொட்டி கடை ஒன்றிற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவில் கடை மீது பாரிய பாறை ஒன்று விழுந்ததில் ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

அனர்த்தத்தில் சிக்கியிருந்த நிலையில் காயமடைந்து மீட்கப்பட்ட 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த தேடுதல் நடவடிக்கையும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டி வீதியிலுள்ள பஹல கடுகண்ணாவ மற்றும் மாவனெல்லவுக்கு இடையிலான பகுதியில் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார். (FB)