கொழும்பின் புறநகர் பகுதியான மஹரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மான வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றினுள் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கம்மான வீதி, 4வது ஒழுங்கைக்கு அருகில் முச்சக்கர வண்டி ஒன்றினுள் நேற்று இரவு குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மஹரகம பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இச் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் – கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தொடர்பான நீதவான் விசாரணை நடைபெறவுள்ளது.
இச்சம்பவம் கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பில் மஹரகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










